அண்மைய இடுகைகள்
எரியூட்டியின் நிறுவல்
தொற்றுக்குள்ளான கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப் படுத்த ஒரு பிரத்தியேக வசதியின் தேவை முக்கியத்துவத்தை உணர்ந்து பொதுச் சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் மேலதிக சுகாதாரச் செயலாளரின் ஆதரவுடன் மற்றும் உலக வங்கியின் நிதியுதவியுடன் ஒரு எரியூட்டி நிறுவப்பட்டது. இது தொற்று நோய்களுக்கான இலங்கையிலுள்ள ஒரேயொரு பிரத்தியேக நிறுவகத்தின் பொதுச் சுகாதார மற்றும் பாதுகாப்பின் மிக உயர்ந்த தரத்தை பேணுகிறது.
Share this article