கலைச் சங்கம் மற்றும் பௌத்த சங்கத்தை மீண்டும் நிறுவுதல்.

கலைத் துணைக்குழு மற்றும் பௌத்தத் துணைக்குழு என்பன முன்பு மருத்துவமனை நலச் சங்கத்தின் ஒருங்கிணைந்த பகுதிகளாகும். இவை முறையே சுதந்திரக் கலைச் சங்கம் மற்றும் பௌத்த சங்கமாக மீண்டும் நிறுவப்பட்டுள்ளன. இந்த மூலோபாயப் பகுப்பு பௌத்த சங்கம் மருத்துவமனைக்குள் அனைத்து மத நடவடிக்கைகளையும் ஒழுங்கமைப்பதில் கவனம் செலுத்த உதவுகிறது. அதே நேரத்தில் கலைச் சங்கம் இலக்கிய மற்றும் கலை முயற்சிகளை வளர்ப்பதற்கும் மருத்துவமனையின் கலாச்சார மற்றும் ஆன்மீகத் துறைகளை வளப்படுத்துவதற்கும் தன்னை அர்ப்பணிக்கிறது.

மருத்துவமனையில் வரலாற்றுப் பொருட்களைப் பாதுகாக்கும் பணி தொடங்கப்பட்டது

பிரித்தானிய காலனித்துவக் காலத்திற்குரிய மருத்துவமனை என்பதால் அதன் புராதன கலைப்பொருட்களைப் பேணிப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த புராதன கலைப்பொருட்கள் பாதுகாக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தபடுவதை உறுதி செய்வதன் மூலம் அவற்றின் வளமான பாரம்பரியம் மதிக்கப்படுகிறது

கிளினிக் கட்டிடத்தை புதுப்பித்தல்

வைத்திய கலாநிதி சனத் கொப்பரஹேவாவின் ஒருங்கிணைப்பு மற்றும் இராஜகிரிய டுவர்ஸ் அன்ட் டிரான்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் (RTT)-இன் தாராள நன்கொடையுடன் புனரமைக்கப்பட்டு புதிய தளபாடங்களுடன் கூடிய கிளினிக் கட்டிடம் ஏப்ரல் 23, 2023 அன்று பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட்டது.  of April,2023.

எரியூட்டியின் நிறுவல்

தொற்றுக்குள்ளான கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப் படுத்த ஒரு பிரத்தியேக வசதியின் தேவை முக்கியத்துவத்தை உணர்ந்து பொதுச் சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் மேலதிக சுகாதாரச் செயலாளரின் ஆதரவுடன் மற்றும் உலக வங்கியின் நிதியுதவியுடன் ஒரு எரியூட்டி நிறுவப்பட்டது. இது தொற்று நோய்களுக்கான இலங்கையிலுள்ள ஒரேயொரு பிரத்தியேக நிறுவகத்தின் பொதுச் சுகாதார மற்றும் பாதுகாப்பின் மிக உயர்ந்த தரத்தை பேணுகிறது.

ஆய்வக வளாகத்தின் தரைப் பணியின் துவக்கம்

ஆசிய வளர்ச்சி வங்கியின் HSEP திட்டத்தின் கீழ் கட்டப்படவிருந்த BSL-2 ஆய்வக கட்டுடத்தொகுதியின் இடைநிறுத்தப் பட்டிருந்த நிர்மாணப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன

மருத்துவமனைக்கான இணையதளம் மற்றும் முகநூல் பக்கத்தை உருவாக்குதல்

வைத்திய நிபுணர் ஆலோசனையைத் தொடர்ந்து, டாக்டர் ஆனந்த விஜேவிக்ரமந்த் வழிகாட்டுதலின் கீழ் மருத்துவமனை முன்னாள் பணிப்பாளர் டாக்டர் தினேஷ் கோகலகே, உலக சுகாதார அமைப்பின் நிதியுதவியுடன் தொற்று நோய்கள் குறித்து பொதுமக்களுக்குக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்ட இணையதளம் மற்றும் பேஸ்புக் பக்கத்தை உருவாக்கத் தொடங்கினார்.